கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை - திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
By DIN | Published On : 17th July 2022 12:54 AM | Last Updated : 17th July 2022 12:54 AM | அ+அ அ- |

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ஜூலை 19 முதல் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் (எண்: 22207) ஜூலை 19 ஆம் தேதி முதல் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
அதேபோல, திருவனந்தபுரம் - சென்னை விரைவு ரயிலில் (எண்: 22208) ஜூலை 20 ஆம் தேதி முதல் கூடுதலாக 2 குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.