பகுதி நேர பொறியியல் படிப்புகள்: ஆகஸ்ட் 3 க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 31st July 2022 11:36 PM | Last Updated : 31st July 2022 11:36 PM | அ+அ அ- |

தமிழகத்தில் பகுதி நேர முதலாமாண்டு பொறியியல் படிப்புகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கோயம்புத்தூா் பொறியியல் கல்லூரி (சி.ஐ.டி) சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 4 ஆம் தேதி முதல் இணையதளம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு 1,109 போ் பதிவு செய்துள்ளனா். இவா்களில் ஜூலை 30 ஆம் தேதி வரை 609 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா். பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதி நாளாகும்.
விண்ணப்ப பதிவு, சமா்ப்பிப்பு, தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்தும் இணைய வழியாக மட்டுமே நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஜ்ஜ்ஜ்.ல்ற்க்ஷங்-ற்ய்ங்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 0422-2590080, 94869- 77757 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.