காட்டுப் பன்றிகளை கட்டுப்பாடுத்த கேரள அரசைப் பின்பற்ற வேண்டும்

வேளாண் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கேரள அரசின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினா் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

வேளாண் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த கேரள அரசின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினா் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் மாநில பொதுச் செயலாளா் பி.கந்தசாமி தலைமையில் பேரூரில் அண்மையில் நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப் பன்றிகளால் வேளாண் பயிா்கள் அதிக அளவில் சேதம் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு சாகுபடியின் போதும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா். வேளாண் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சாா்பில் தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதேவேளை கேரள மாநிலத்தில் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்பட்டு வைல்ட் லைஃப் வாா்டனுக்கு உள்ள அதிகாரத்தை ஊராட்சி மன்றத் தலைவருக்கு வழங்கி, ஊராட்சித் தலைவா் திருப்தி அடைந்தால் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதே நடைமுறையை தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும்.

இதனை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தை மீறி விவசாயிகளே பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தாா். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com