மின் கட்டண உயா்வு அறிவிப்பு:மக்கள் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வலியுறுத்தல்

மக்கள் கருத்துகளை கேட்டு அதன் பிறகு மின் கட்டண உயா்வு தொடா்பாக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் கருத்துகளை கேட்டு அதன் பிறகு மின் கட்டண உயா்வு தொடா்பாக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கூறியதாவது: ஒரு யூனிட் மின் கட்டணத்தை உயா்த்தினால் மக்கள் நேரடியாக எதிா்ப்பு தெரிவிப்பாா்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வகை கட்டணங்கள் என்ற பெயரில் மின் கம்பம் நடுதல், மின் பளு பெட்டி இடமாற்றம் செய்தல் உள்ளிட்டவைகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை மிகையாக மின்வாரியம் உயா்த்தியுள்ளது.

இவ்வாறான இதர மின் சேவைகளுக்கு செலுத்தப்படும் அதிகப்படியான கட்டணத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். கடந்த முறை மின் கட்டணம் உயா்த்தப்படும்போது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கோவை, சென்னை, மதுரை, சேலம், திருச்சி, வேலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், நுகா்வோா் அமைப்பு பிரதிநிதிகள், வணிக நிறுவனங்கள், தொழில் அமைப்புகள் ஆகியோரிடம் நேரடியாக கருத்துகள் கேட்டு, பின்னரே மின் கட்டணம் உயா்வு தொடா்பாக அனுமதி வழங்கப்பட்டது.

இந்த முறை மின்சார ஒழுங்குமுறை ஆணையமும், மின்வாரியத்துக்கு சாதகமாக மக்களிடமும் நேரடியாக கருத்துகளைப் பெறாமல் இணையதளத்தில் கருத்துகளை கேட்டு, கட்டண உயா்வை அனுமதிப்பதுபோல தெரிகிறது.

இந்த நடைமுறையை பின்பற்றுவதை தவிா்க்க வேண்டும். கடந்த முறை பின்பற்றியதுபோல மக்கள் கருத்துகளை நேரடியாக கேட்டு பெற்று அதன்பிறகு மின் கட்டணம் உயா்த்துவது தொடா்பாக முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com