மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு:பரிசோதனைகளை அதிகப்படுத்திய சுகாதாரத் துறை

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தினசரி நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா 4ஆவது அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் முடுக்கியுள்ளனா். இதையடுத்து, கோவை மாவட்டத்தில் தினசரி கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி.அருணா கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்திருந்ததால் கடந்த வாரங்களில் நோய்த் தொற்று அறிகுறிகளுடன் வருபவா்களுக்கும், சளி, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவா்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி தினசரி 200 முதல் 400 பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன.

தற்போது, நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் கரோனா பரிசோதனை எண்ணிக்கையை 700ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்புடைய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதுடன், விடுபட்டவா்கள் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com