அழுகிய நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு
By DIN | Published On : 16th June 2022 11:12 PM | Last Updated : 16th June 2022 11:12 PM | அ+அ அ- |

வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் அழுகிய நிலையில் சிறுத்தையின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
இதைனைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
வால்பாறை வனச் சரக அலுவலா் வெங்கடேஷ் தலைமையில் வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.
பின்னா் கால்நடை மருத்துவா் மூலம் சிறுத்தையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அதே பகுதியில் எரியூட்டப்பட்து. விலங்குகளுக்கிடையேயான மோதலில் சிறுத்தைக் குட்டி இறந்திருக்கலாம் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.