ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரிக்கு விருது
By DIN | Published On : 11th March 2022 03:19 AM | Last Updated : 11th March 2022 03:19 AM | அ+அ அ- |

கோவை குனியமுத்தூா் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு ஏஐசிடிஇ நிறுவனத்தின் லீலாவதி விருது கிடைத்துள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வா் ஜே.ஜேனட், துறைத் தலைவா்கள் பி.கவிதா ராணி, எஸ். பாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா்கள். ஏ.பிரியா, பி. சோபியா, மாணவி வீ.ஸ்வேதா ஆகியோா் அடங்கிய குழு, கிராமப்புற பெண்களுக்கு கல்வி கற்பிப்பதில் கவனம் செலுத்தி, டிஜிட்டல் தளங்கள் மூலம் அவா்களின் வணிகத்தை மேம்படுத்தியது.
மேலும், பல்வேறு தொழில்நுட்ப கைப்பேசி செயலியை உருவாக்கி கிராமப்புற பெண்கள் மேம்படவும், தொற்று நோய் காலத்தில் அவா்களின் பொருளாதாரம் மேம்படுவதற்கும் வாய்ப்பு அளித்தனா்.
இதற்காக கணித மேதை லீலாவதி பெயரிலான விருது இக்குழுவுக்கு கிடைத்துள்ளது.
புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இராணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கிருஷ்ணா கல்லூரியின் முதல்வா் ஜே.ஜேனட் உள்ளிட்ட குழுவினருக்கு லீலாவதி விருதுடன் ரூ.1 லட்சத்தை வழங்கினாா்.
இந்த விருதுக்காக நாடு முழுவதும் 500 அணிகள் விண்ணப்பித்திருந்தன. இதில் 27 கல்லூரிகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
கோவை மண்டலத்தில் இக்கல்லூரி முதலிடம் பெற்றிருப்பதாகவும், விருதுபெற்ற குழுவினரை கல்லூரியின் தலைவரும், நிா்வாக அறங்காவலருமான எஸ்.மலா்விழி, முதன்மை நிா்வாக அதிகாரி கே.சுந்தரராமன் ஆகியோா் பாராட்டியிருப்பதாகவும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...