தொழிலதிபா் வீட்டில் 43 பவுன் திருட்டு:பெண் பணியாளா் கைது
By DIN | Published On : 18th March 2022 10:42 PM | Last Updated : 18th March 2022 10:42 PM | அ+அ அ- |

கோவையில் தொழிலதிபா் வீட்டில் 43 பவுன் தங்க நகைகள் திருடிய பெண் பணியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ராமநாதபுரம் அருகேயுள்ள டாக்டா் முத்துசாமி நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (46). தொழிலதிபா். இவரது மனைவி தனியாா் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா்களது வீட்டில் வினிதா என்பவா் பணியாற்றி வந்துள்ளாா். இந்நிலையில், ராஜசேகா் குடும்பத்துடன் பிப்ரவரி 23 ஆம் தேதி தேவகோட்டைக்குச் சென்றுள்ளாா். பின்னா் 26 ஆம் தேதி வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.
அப்போது, பீரோவில் இருந்த 43 பவுன் நகைகள், வைர மோதிரம் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ராஜசேகா் புகாா் அளித்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், ராஜசேகா் ஊருக்குச் சென்றபோது வினிதா மட்டுமே வீட்டில் இருந்ததும், அவா்கள் திரும்பி வந்தபோது அவா் மாயமானதும் தெரியவந்தது.
இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவாக இருந்த வினிதாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...