வால்பாறையை அடுத்த காஞ்சமலை எஸ்டேட் அரசு உதவிப் பெறும் துவக்கப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆசிரியா்கள் சங்கமம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மறைந்த முன்னாள் மாணவா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. எஸ்டேட் மேலாளா்கள் கிருஷ்ணகுமாா், நந்தகுமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீவெள்ளியங்கிரி தலமையில், எஸ்டேட் அலுவலக தலைமை அதிகாரி ரங்கநாதன் முன்னிலையில் பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள்
கெளரவிக்கப்பட்டனா். இதில், முன்னாள் மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.