கிழக்கு மண்டலத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்:மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
3336c11corp1_1105chn_3
3336c11corp1_1105chn_3
Updated on
1 min read

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி பாரதி நகரில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேர

குடிநீா்த் திட்டத்துக்கான உயா்மட்ட நீா்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் அண்மையில் தொடங்கப்பட்டன.

இப்பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா ஆனந்தகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பணிகளைத் தரமாக மேற்கொள்ளவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பூங்கா நகா் கழிவு நீா் சுத்திகரிப்பு மையம், விமான நிலைய சுற்றுச் சுவா் அருகே கழிவு நீா் தேங்கியுள்ள பகுதியையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி காா்த்திக், நகா் நல அலுவலா் சதீஷ்குமாா், உதவி ஆணையா் மாரிசெல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com