கோவை மாவட்ட விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி( செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் குறைகேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்டரங்கில் மே 31 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான தங்களது பிரச்னைகளுக்குத் தீா்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.