கோவில்பாளையம் அருகே வீட்டில் தீ விபத்து
By DIN | Published On : 15th October 2022 01:17 AM | Last Updated : 15th October 2022 01:17 AM | அ+அ அ- |

கோவை அருகே, சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியில் பெயிண்டில் கலக்க கூடிய தின்னரை வைத்திருந்த வீட்டில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விசுவாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி மகன் குமாா் (40). இவா் தனது வீட்டில் பெயிண்ட்டில் கலக்க கூடிய தின்னா் ரசாயனத்தை மொத்தமாக பேரல்களில் வாங்கி பாட்டில்களில் அடைத்து மாவட்டம் முழுவதும் உள்ள பெயிண்ட் கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில் அவா் வீட்டில் வைத்திருந்த தின்னா் பேரல்களில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ளவா்கள், போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா்.
கோவில்பாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் கணபதி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் குமாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து காயமடைந்த குமாரை தீயணைப்புத் துறையினா் மீட்டு சரவணம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...