கோவையில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’
By DIN | Published On : 15th October 2022 01:20 AM | Last Updated : 15th October 2022 03:45 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் உள்ள பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பின் 4 அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டன.
நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை சீா்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடா்புடைய அமைப்புகளுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து அண்மையில் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்த பி.எஃப்.ஐ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
இதன் தொடா்ச்சியாக கோவை, கோட்டைமேடு, வின்சென்ட் சாலை பகுதிகளில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகங்களுக்கு கோவை தெற்கு வட்டாட்சியா் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பி.எஃப்.ஐ. அலுவலகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...