

கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.என்.சுப்ரமணியன் விழாவைத் தொடங்கிவைத்தாா். தாளாளா் எஸ்.ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குநா் எஸ்.நளின் விமல்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.செந்தூா்பாண்டியன் வரவேற்றாா். இரு கல்லூரிகளின் முதல்வா்களும் ஆண்டறிக்கை வாசித்தனா்.
இதில், கேப்ஜெமினி என்ஜினீயரிங் இயக்குநா் பி.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினாா். இதில், எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி ாணவா்கள் 1,047 போ்களுக்கும், பொறியியல் கல்லூரி மாணவா்கள் 456 போ்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.