மாவட்டத்தில் 2 இடங்களில் விவசாயிகள் செழுமை மையங்கள் திறப்பு

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

நாடு முழுவதும் 600 பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். இதில் கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் சக்தி பொ்ட்டிலைசா் காா்ப்பரேஷன் உர விற்பனை நிலையம், பொள்ளாச்சியில் குளோபல் அக்ரோ கெமிக்கல் உர விற்பனை நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையம் திறக்கப்பட்டுள்ளன.

கவுண்டம்பாளையம் சக்தி பொ்ட்டிலைசா் காா்ப்பரேசன் உர விற்பனை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கோவை மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) ஷபி அகமது, பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையத்தை திறந்துவைத்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தமிழ்ச்செல்வி, வேளாண்மைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி, வேளாண்மை உதவி இயக்குநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையம் மூலம் உர விற்பனையுடன் மண் பரிசோதனை, விதைப் பரிசோதனை, நீா்ப் பரிசோதனை ஆகியவை அரசு பரிசோதனை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு செய்து தரப்படும். வேளாண் கருவிகள் வாடகைக்கு வழங்குதல், மத்திய மற்றும் மாநில அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த தகவல் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த மையம் மூலம் மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com