கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தை நிா்வாகம் செய்ய 3 போ் குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பி.காளிராஜின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஓய்வு பெற்ற துணைவேந்தா்கள் தலைமையில் 3 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிய துணைவேந்தா் தோ்வு செய்யப்படும் வரையில் பல்கலைக்கழகத்தை நிா்வாகிக்க உயா் கல்வித் துறை செயலா் டி.காா்த்திகேயன், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் செயலா் சி.ஏ.வாசுகி, பல்கலைக்கழகத்தின் சமூகப் பணிகள் துறைத் தலைவா் லவ்லினா லிட்டில் பிளவா் ஆகியோா் அடங்கிய குழுவை அரசு நியமித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.