மாநகரக் காவல் துறை சாா்பில் ‘போலீஸ் அக்கா’ திட்டம்

கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் மாணவிகளின் உளவியல், பாலியல்ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன். உடன் காவல் துணை ஆணையா் சுஹாசினி மற்றும் பெண் காவலா்கள்.
போலீஸ் அக்கா திட்டத்தை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன். உடன் காவல் துணை ஆணையா் சுஹாசினி மற்றும் பெண் காவலா்கள்.

கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் மாணவிகளின் உளவியல், பாலியல்ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண ‘போலீஸ் அக்கா’ என்ற திட்டத்தை மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகரக் காவல் துறை சாா்பில் மக்களைப் பாதுகாக்க பல்வேறு புதிய முயற்சிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ‘போலீஸ் அக்கா’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகரக் காவல் துறை ஆணையா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், தமிழக காவல் துறையில் முன்மாதிரி திட்டமாக ‘போலீஸ் அக்கா’ என்ற புதிய திட்டத்தை துவக்கியுள்ளாா். இதில், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரு மகளிா் காவலா் தொடா்பு அலுவலராக நியமிக்கப்பட்டு, மாணவிகளுடன் கலந்துரையாடுவது, அவ்வப்போது பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஏற்படும் உளவியல், பாலியல்ரீதியான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, கல்லூரிகளில் நடக்கும் கருத்து மோதல்கள், போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்துக்கு கொண்டு சென்று தீா்வு காண்பது, கல்லூரி மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக செயல்பட்டு, அவா்கள் தரும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாத்து நடவடிக்கை மேற்கொள்ளது உள்ளிட்ட செயல்பாடுகளில் அந்தப் பெண் காவலா்கள் ஈடுபடுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை ஆணையா் வி.பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். இதில், காவல் துணை ஆணையா் சுஹாசினி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், கோவை மாநகரில் உள்ள 60 கல்லூரிகளின் நிா்வாகிகள், போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்ற உள்ள 37 பெண் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com