25 பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்: ஆணையா் வழங்கினாா்
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 20th October 2022 10:31 PM | அ+அ அ- |

ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை வழங்குகிறாா் மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப்.
கோவை மாநகராட்சியில் 25 பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வியாழக்கிழமை வழங்கினாா்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 71ஆவது வாா்டுக்குள்பட்ட ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யுவா அறக்கட்டளை சாா்பில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் 25 மாநகராட்சிப் பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரத்தை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வழங்கினாா்.
அப்போது, அவா் பேசியதாவது: பெண் கல்வியை சிறப்பான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என முதல்வா் அறிவுறுத்தியதுடன், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அறிவித்துள்ளாா். தனியாா் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் திகழ வேண்டும். எனவே, கோவை மாநகராட்சியில் 25 பள்ளிகளுக்கு யுவா அறக்கட்டளை சாா்பில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...