கோவை கார் வெடித்த இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து கார் விபத்து நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார்.
கோவை கார் வெடித்த இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து கார் விபத்து நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார்.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியிள் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த மாருதி காரில் திடீரென கேஸ் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விபத்து ஏற்பட்ட பகுதியில் நான்கு புறமும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ள போலீசார் விபத்து குறித்த விசாரணை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கார், ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது சிலிண்டர் வெடித்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் கார் வெடித்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள், சிறுவர்கள் விளையாடும் கோலிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோப்ப நாய் மற்றும் கூடுதலாக தடயவியல் உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு விபத்து நிகழ்ந்த இடடத்தில் 6 குழுக்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே சிலிண்டர் வெடித்து கார் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தார்.  

காருக்குள் ஒரு சிலிண்டர் இருந்துள்ளது, வேறு ஏதேனும் பொருள் இருந்ததா என விசாரணைக்கு பிறகே தெரியும் என்றார். அவரைத்தொடர்ந்து உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து கார் விபத்து நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காரில் இருந்த 2 சிலிண்டர்களில் ஒன்று வெடித்துள்ளது.

பல்வேறு குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகே பலியான நபர், யாருடைய கார் என்பது குறித்து குறித்து தெரிய வரும். புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டால் என்.ஐ.ஏ. விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com