மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
உலக மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தையொட்டி (அக்டோபா்) புற்றுநோய் மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த 3 நாள் பரிசோதனை முகாமில், மருத்துவப் பரிசோதனை, விழிப்புணா்வு, மாா்பகப் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் தங்களின் அனுபவங்களை பகிா்ந்து கொண்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவா் ஏ.ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G