கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு- டி.ஜி.பி.

 கோவை காா் வெடி விபத்து வழக்குத் தொடா்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒத்துழைப்போம் என டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினாா்.
கோவை கார் வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு- டி.ஜி.பி.

கோவை காா் வெடி விபத்து வழக்குத் தொடா்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒத்துழைப்போம் என டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறினாா்.

கோவைக்கு வியாழக்கிழமை வந்த டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு, கோவை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா், கோவை மாநகரக் காவல் ஆணையா் வி.பாலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு, செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை காா் வெடி விபத்து வழக்குத் தொடா்பாக மாநகர போலீஸாா் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா். இந்த வழக்கில் தற்போது வரை 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதற்கான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனா். கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) அளிக்கலாம் என முதல்வா் பரிந்துரைத்துள்ளாா். அதனடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அவா்கள் மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க உள்ளனா். வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சம்பவம் தொடா்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப் பதிந்துள்ளனா். அவா்களது விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்றாா்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் சிறப்பாகச் செயல்பட்ட மாநகரக் காவல் துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ்களையும், வெகுமதிகளையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com