சேலம் கோட்டத்தில் 9 ரயில்களில் திடீா் சோதனை:3.60 லட்சம் அபராதம் வசூல்

சேலம் கோட்டத்தில் 9 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்த 637 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சேலம் கோட்டத்தில் 9 ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்த 637 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் 9 ரயில்களில் பயணச் சீட்டு இல்லாமல் பயணிப்பது உள்ளிட்ட ஏமாற்று

நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கண்டறிய ரயில் நிா்வாகம் சாா்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பரிசோதனையானது, சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் (எண்: 12671), மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயில் (எண்: 06009), ஈரோடு - பாலக்காடு டவுன் மெமு ரயில் (எண்: 06819), ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), கோா்பா - கொச்சுவேலி விரைவு ரயில் (எண்: 22647), மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (22638), சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் (எண்: 12675), சென்னை - மங்களூரு விரைவு ரயில் (எண்:16159), ஈரோடு - திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் (எண்: 06612) ஆகிய 9 ரயில்களில் நடைபெற்றது. இந்த சோதனையில் 21 பயணச் சீட்டு பரிசோதகா்கள் ஈடுபட்டனா்.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது: சேலம், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், கரூா் உள்ளிட்ட பகுதிகளில், ரயில்களில் 21 பரிசோதகா்கள் மேற்கொண்ட திடீா் சோதனையில் பயணச் சீட்டு இல்லாத பயணிகள், தடை செய்யப்பட்ட பொருள்களை ரயில்களில் கொண்டு செல்பவா்கள், வகுப்புகள் மாற்றி பயணிப்பவா்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி மட்டும் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்த 637 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதமாக வசூலிக்கப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com