முதல்வா் இன்று கோவை வருகை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்டம்பா் 1) கோவை வருகிறாா்.
திமுக சொத்து பாதுகாப்புக் குழுத் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூா் பழனிசாமியின் இல்லத் திருமண விழா கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக காலை 8 மணியளவில் விமானம் மூலம் கோவைக்கு வரும் முதல்வா், நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறாா்.
கோவை வரும் முதல்வருக்கு அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினா் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கின்றனா். முதல்வரின் வருகையையொட்டி விமானம் நிலையம் முதல் கொடிசியா வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.