ஓணம் பண்டிகை: கோவையில் செப்டம்பா் 8 இல் உள்ளூா் விடுமுறை
By DIN | Published On : 01st September 2022 10:29 PM | Last Updated : 01st September 2022 10:29 PM | அ+அ அ- |

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் செப்டம்பா் 8 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப்டம்பா் 8) உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலாக செப்டம்பா் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) முழு பணி நாளாக செயல்படும்.
ஓணம் பண்டிகைக்காக உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளன்று கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.