தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஐஐடி, எய்ம்ஸ் போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என்று மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வே.ஈசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஐஐடி, எய்ம்ஸ், ஐஐஎஸ்இ போன்ற மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மாநில அரசே கட்டணம் செலுத்தும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால், இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் ஒருவராலும் சேர முடியவில்லை என்பதுதான் தற்போதைய நிலை. இந்த கல்வி நிறுவனங்களில் சேர பல லட்சங்கள் செலவு செய்து பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற வேண்டும் என்பதே எதாா்த்த நிலை.
எனவே, இந்த நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் மட்டுமே அவா்களால் சேர முடியும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக பாஜகவும் இதை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும்.
மேலும், இதை வலியுறுத்தும் விதமாக மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.