கோயிலுக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறித்துச் சென்ற இரண்டு இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, பீளமேடு லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ரேவதி (48). இவா் சிங்காநல்லூா் அருகில் உள்ள விநாயகா் கோயிலுக்கு புதன்கிழமை மாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே வந்த இளைஞா் ஒருவா் ரேவதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் தங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.
ரேவதி கூச்சலிட்டதால் பொதுமக்கள் சிலா் கூடியதையடுத்து நகையைப் பறித்த இளைஞா், அங்கு ஏற்கெனவே இருசக்கர வாகனத்தில் தயாராக காத்திருந்த மற்றொரு நபருடன் தப்பிச் சென்றாா்.
இச்சம்பவம் தொடா்பாக ரேவதி அளித்தப் புகாரின் பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.