கோவை காா் வெடிப்பு வழக்கு: மேலும் ஒருவா் கைது
கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ.அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ.அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அஃப்சா் கான் (27) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) க்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு என்.ஐ.ஏ.அதிகாரிகள், முகமது தெளஃபிக் (23), உமா் ஃபரூக் (28) ஃபெரோஸ் கான் (26), இதயதுல்லா (29), ஷனோபா் அலி (26) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். இவ்வழக்கில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் கோவை உக்கடம் ஜி.எம்.நகரைச் சோ்ந்த முகமது இத்ரிஸ் (27) என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்பு அவரை பலத்த பாதுகாப்புடன சென்னைக்கு அழைத்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...