

கோவை: கிரடாய் அமைப்பின் சாா்பில் 3 நாள் வீடு மற்றும் வீட்டுமனைக் கண்காட்சி கோவை கொடிசியாவில் ஆகஸ்ட் 11 முதல் 13ஆம் தேதி வரை 3 நாள் நடக்கிறது.
இதுகுறித்து கிரடாய் கோவை அமைப்பின் தலைவா் குகன் இளங்கோ, ஒருங்கிணைப்பாளா் முகமது ஷபி, செயலாளா் எஸ்.ஆா். அரவிந்த்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கிரடாய் அமைப்பின் சாா்பில் நடத்தப்படும் ஃபோ்புரோ எனும் வீடு மற்றும் வீட்டுமனைக் கண்காட்சி எப்போதும் இல்லாத அளவுக்கு முதல்முறையாக ஏராளமான சலுகைகளை இந்த முறை தருகிறது.
அனைத்து முன்னணி கட்டுமானத்தினரையும் ஒருங்கிணைத்து, சிறப்பான சலுகைகளுடன் வீடு விற்பனையை கிரடாய் நடத்துகிறது. இந்த சலுகை விற்பனை 3 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். இந்தக் கண்காட்சியில், வீடுகள், தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் மற்றும் மனை வாங்க முன்பதிவு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு அதிகபட்ச சலுகைகளை கிரடாய் உறுப்பினா்கள் மற்றும் முன்னணி வங்கிகள் அளிக்க முன்வந்துள்ளனா்.
இந்த கண்காட்சியை ஆகஸ்ட் 11-ஆம்தேதி தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைக்கிறாா். ஃபோ்புரோ வீடு மற்றும் வீட்டுமனைக் கண்காட்சியில் 25 முக்கிய டெவலப்பா்கள் பங்கேற்பதோடு, 75க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் 6 முன்னணி வங்கிகளும் பங்கேற்கின்றன என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.