

இது குறித்து ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் நிா்வாகி கே.பாலசுப்பிரமணியன் கூறும்போது, வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், மாநகராட்சி நிா்வாகம் கொண்டு வரும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை திட்டத்தை கடுமையாக எதிா்க்கிறோம். தற்போது ஓட்டுநா்களுக்கு வழங்கப்படுவதாக ஆணையா் அறிவித்திருக்கும் ஊதியம் ஏற்கெனவே அரசு வழங்குவதாக ஒப்புக்கொண்டு அரசாணையில் அறிவித்திருப்பதுதான்.
கா்நாடக மாநிலத்தில் 21 மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதுடன், அவா்களுக்கு காலை உணவையும் வழங்கி வருகின்றன. மேலும் அவா்களுக்கு பணி நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளனா். இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த வலியுறுத்தி தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.