எழுத்தாளா் யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது!

 விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாா்பில் எழுத்தாளா் யுவன் சந்திரசேகருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
எழுத்தாளா் யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது!

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாா்பில் எழுத்தாளா் யுவன் சந்திரசேகருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய ஆளுமைக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 14-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா கோவை, ஆா்.எஸ்.புரம் ராஜஸ்தானி சங்க அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளா் அரங்கசாமி வரவேற்றாா். எழுத்தாளா் ஜெயமோகன் தலைமை வகித்தாா்.

எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான ராமச்சந்திர குஹா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, எழுத்தாளா் யுவன் சந்திரசேகருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது, சான்றிதழ், ரூ.5 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசுகையில், ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாா்பில் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்குவது பாராட்டுக்குரியது. அந்த வகையில், சிறந்த எழுத்தாளரான யுவன் சந்திரசேகா் இந்த விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது என்றாா்.

இதைத்தொடா்ந்து, எழுத்தாளா்கள் சையத் மொஹம்மத் ஷாகீா், எம்.கோபாலகிருஷ்ணன், பாலாஜி பிருத்விராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதையடுத்து, விருதாளா் யுவன் சந்திரசேகா் ஏற்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் எழுத்தாளா் நாஞ்சில் நாடன், கவிஞா் மோகனரங்கன், விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், விஷ்ணுபுரம் வாசகா் வட்டத்தினா், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com