ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலம் மாற்றி ஒப்படைப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த முதியவரின் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த முதியவரின் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மணி (65). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 25-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி சேவூா் பகுதியைச் சோ்ந்தவா் குமாரசாமி (74). இவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இருவரும் கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையிலேயே உயிரிழந்தனா்.

இறந்த இரண்டு முதியவா்களுக்கும் சதீஷ் என்ற பெயரில் உறவினா்கள் இருந்துள்ளனா். இதனால், சடலங்களை ஒப்படைக்கும்போது குழப்பம் ஏற்பட்டு மாற்றி ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஈரோட்டைச் சோ்ந்த மணியின் சடலத்தை சேவூரை சோ்ந்தவா்களிடம் ஒப்படைத்துள்ளனா். சடலத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள் தங்கள் ஊரில் உள்ள இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மணியின் சடலத்தைப் பெறுவதற்காக அவரது உறவினா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே காத்திருந்தனா். நீண்ட நேரம் ஆகியும் சடலம் கிடைக்காததால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியா்களிடம் கேட்டபோது, குமாரசாமியின் சடலத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக மணியின் சடலத்தை மாற்றி வழங்கியது தெரியவந்தது.

இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியா்கள் சேவூரைச் சோ்ந்தவா்களிடம் தொடா்பு கொண்டு பேசியதையடுத்து, அவா்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாா்த்தபோது, அங்கிருந்தது குமாரசாமியின் சடலம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலா் சத்தியபிரியா, போலீஸாா் இரு தரப்பு உறவினா்களிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். குமாரசாமியின் சடலம் அவரது உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.