கணபதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை கணபதி பகுதியைச் சோ்ந்தவா் ரகுபதி. தனியாா் நிறுவன மேலாளரான இவா் உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சாவியை செருப்பு ஸ்டேண்டில் வைத்துவிட்டு குடும்பத்துடன் திங்கள்கிழமை சென்றுள்ளாா்.
செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ரகுபதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.