பொறியியல் பராமரிப்புப் பணி:கோவை - சேலம் ரயில் பிப்ரவரி 28 வரை ரத்து

கோவை - திருப்பூா் இடையே இருகூா் - சூலூா் சாலை ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை - திருப்பூா் இடையே இருகூா் - சூலூா் சாலை ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை - சேலம் ரயில் பிப்ரவரி மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கோவை - சேலம் மெமு ரயில் (எண்: 06802), சேலம் - கோவை மெமு ரயில் (எண்: 06803) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி - பாலக்காடு ரயில் (எண்:16843) பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். பிலாஸ்பூா் - எா்ணாகுளம் வாராந்திர ரயில் (எண்: 22815) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை இரண்டரை மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். அதேபோல, நண்டேடு - எா்ணாகுளம் வாராந்திர ரயில் (எண்: 07189) பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com