

கரோனா பெருந்தொற்று காலம் ஏற்படுத்திய கற்றல் இடைவெளியை நிரப்புவதற்கு ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வலியுறுத்தியுள்ளாா்.
கோவை மாநகராட்சியில் அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதம் குறித்த திறனாய்வுக் கூட்டம் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் பேசும்போது, வெளியில் இருந்து பாா்ப்பவா்களுக்கு கோவை கல்வியில் முன்னேறிய மாவட்டமாகத் தெரியலாம். ஆனால் இங்கும் நிறைய குறைபாடுகள் உள்ளன.
8 ஆம் வகுப்பு மாணவருக்குக் கூட சரிவர எழுத, படிக்கத் தெரியாத நிலை சில பள்ளிகளில் உள்ளது. அவற்றை நாம் உடனடியாக சரி செய்ய வேண்டியுள்ளது. கரோனா காரணமாக 2 ஆண்டுகள் கற்றல் இடைவெளி ஏற்பட்டது.
இந்த பிரச்னையை சரி செய்ய, கற்றல் இடைவெளியை நிரப்புவதற்கு ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் பொதுத் தோ்வுகளில் நல்ல தோ்ச்சி விகிதம் பெற முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் சுமதி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் பாண்டியராஜசேகரன், முருகேசன், மாநகராட்சி கல்வி அலுவலா் மரிய செல்வம், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பொறுப்பு ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.