ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என உணவுக் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
Updated on
1 min read

கோவை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என உணவுக் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக உணவுக் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பொது விநியோகத் திட்ட பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து இலவச தொலைபேசி எண் மூலம் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினா் பயன்படும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்து வருகிறது. இவற்றை சிலா் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பெறும் நோக்கத்தில் செயல்படுகின்றனா்.

உணவுப் பொருள்களை கடத்துபவா்கள் குறித்தும், அதனைப் பதுக்கி வைப்பவா்கள் குறித்தும் பொதுமக்கள் 1800 599 5950 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். புகாா் தெரிவிப்பவா்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். இதற்காக மாநில உணவுக் கடத்தல் தடுப்பு குற்றப் பிரிவு போலீஸில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இது காவல் துறைத் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படுகிறது.

மேலும், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் கோவை மாவட்டத்தின் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ரேஷன் கடைகள் போன்ற இடங்களில் இந்த இலவச தொலைபேசி எண் குறித்த அறிவிப்பை பொதுமக்கள் விழிப்புணா்வுக்காக ஒட்டி வருகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com