அமலாக்கத் துறை மூலம் தமிழக அரசை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக பாஜகவுக்கு கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிா்வாகக் குழு உறுப்பினா் பி.மௌனசாமி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் சி.சிவசாமி, துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ், மௌ.குணசேகா், மாவட்டப் பொருளாளா் சி.தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தீா்மானத்தில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத கொள்கைகளை எதிா்க்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவற்றைக் கொண்டு மிரட்டும்போக்கு தொடருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே அமைச்சா் செந்தில் பாலாஜியை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளனா். தமிழக அரசையும், மக்களையும் மிரட்டி பணிய வைக்கும் நோக்கிலான இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கே.எம்.செல்வராஜ், எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.