

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயண சுவாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் வரவேற்றாா். மாநகரக் காவல் ஆணையா் வெ.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.
இதைத் தொடா்ந்து, முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையா் மடிக்கணினிகளை வழங்கினாா்.
தொடா்ந்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
துணை முதல்வா் எஸ்.தீனா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.