கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பு கூட்டமைப்பு தொடக்கம்

கோவை மாநகரில் உள்ள 50க்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை உறுப்பினா்களாகக் கொண்டு, ‘கோயம்புத்தூா் அபாா்ட்மெண்ட் அசோசியேஷன்’ என்ற பெயரில் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் உள்ள 50க்கு மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை உறுப்பினா்களாகக் கொண்டு, ‘கோயம்புத்தூா் அபாா்ட்மெண்ட் அசோசியேஷன்’ என்ற பெயரில் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கூட்டமைப்பின் தலைவா் கண்ணன் கூறியது: 1 சென்ட் குறைவாக இருக்கும் வீடு முதல் ஏக்கா் அளவு வீடு இருப்பவா்களுக்கு குப்பைகளை அகற்ற மாநகராட்சி மூலமாக ரூ. 300 வசூல் செய்யப்படுகிறது. ஆனால், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா்களிடம் இதே தொகை வசூலிக்கப்பட்டும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. மாநகராட்சிக்கு குப்பை வரியாக ஆண்டுக்கு ரூ. 300 முதல் ரூ. 1,200 வரை செலுத்தி வருகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் பொருளாதார சூழ்நிலை காரணமாக வரி செலுத்த தாமதம் ஏற்பட்டால் குடிநீா் இணைப்பைத் துண்டிப்பது, குடியிருப்பின் நுழைவு வாயிலில் சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே, அனைவருக்கும் கிடைக்கும் உரிமைகள், சலுகைகள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவா்களுக்கும் கிடைக்க வேண்டும். உரிய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி மேயா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா்களின் கோரிக்கைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அடுக்குமாடி மற்றும் வில்லா சங்கங்களை ஒருங்கிணைத்து கோவை அப்பாா்ட்மெண்ட் குடியிருப்பு கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதில், செயலாளராக செந்தில்குமாா், பொருளாளராக மணிவண்ணன், துணைத்தலைவராக ஜெயபால், இணைச் செயலாளராக நாகராஜ் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com