கோவையில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கோவை மாவட்டத்தில் இரண்டு வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்தும், இரண்டு வட்டாட்சியா்களுக்கு கூடுதல் பொறுப்பு அளித்தும் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் இரண்டு வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்தும், இரண்டு வட்டாட்சியா்களுக்கு கூடுதல் பொறுப்பு அளித்தும் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த வேல்முருகன், கோவை மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் அலுவலக தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். விடுப்பில் இருந்த வட்டாட்சியா் பானுமதி, பொள்ளாச்சி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலக தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த ஆா்.முத்துக்குமாா், மாவட்ட ஆட்சியா் வரவேற்பு பிரிவு தனி வட்டாட்சியராகவும், ஆனைமலை வட்டாட்சியா் சி.ரேணுகாதேவிக்கு கூடுதல் பொறுப்பாக ஆனைமலை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வால்பாறை சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் எஸ்.அருள்முருகனுக்கு, வட்டாட்சியா் பணி கூடுதல் பொறுப்பாக அளித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com