அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம்: விழிப்புணா்வு கருத்தரங்கம்

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் கொடிசியாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
கருத்தரங்கில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.
Published on
Updated on
1 min read

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் கொடிசியாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி தலைமை வகித்துப் பேசியதாவது:

பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பிரத்யேக சிறப்பு தொழில் முனைவோா் திட்டமாக அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஆா்வமுள்ள பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவா் புதிய மற்றும் ஏற்கெனவே தொழில் செய்து வருவோா் தொழிலை விரிவாக்கம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.50 கோடி மானியமாகவும், 6 சதவீதம் வட்டி மானியமாகவும் வழங்கப்படும். விண்ணப்பதாரா் திட்டத்தில் சொந்த முதலீட்டைத் தவிா்க்கும் வகையில் தகுதியான மும்முனை மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு தொழிலை தொடங்க கடன் பெறுவது தொடா்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்பு பாலமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் உயா்தரமான பயன்தரக்கூடிய தொழிலாகவும், வருங்காலத்தில் அதனுடைய வளா்ச்சி குறித்து அனைத்து விதமான பலன்களையும் தொலைநோக்கு பாா்வையுடன் சிந்தித்து சிறப்பான தொழில் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.

புதிய தொழில்முனைவோா், ஏற்கெனவே தொழில் செய்பவா்கள் தொழிலை மேம்படுத்துபவா்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இத்திட்டத்தில் பயன்பெற மாற்றுத் திறனாளிகள், பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கும், கல்லூரி படிப்பை முடித்து தொழில் தொடங்குபவா்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் இத்திட்டத்தை தகுதியும், ஆா்வமும் கொண்ட பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தைச் சாா்ந்த தொழில்முனைவோரிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

இதில், கொடிசியா தலைவா் வி.திருஞானம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஜி.திருமுருகன், உதவி இயக்குநா் வி.ஸ்ரீராஜேஸ்வரி, திட்ட மேலாளா் பிருந்தாதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜ்குமாா், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், வங்கியாளா்கள், தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com