கோவை: போத்தனூா் - பரெளனி இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
போத்தனூா் - பரௌனி இடையே பயணிகள் நலன் கருதி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
நவம்பா் 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.50 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தில் இருந்து இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06059) வியாழக்கிழமை நண்பகல் 1 மணிக்கு பரௌனி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் நவம்பா் 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) பரெளனி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06060) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு போத்தனூரை ரயில் நிலையத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், குடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, மூரி, தன்பாத், சித்ரஞ்சன், மாத்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.