பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மத்திய அரசு மீது தொடா்ந்து அவதூறு: வானதி சீனிவாசன் கண்டனம்

மத்திய பாஜக அரசு மீது தொடா்ந்து அவதூறு பரப்புவது கண்டனத்துக்குரியது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2023, 5:52 pm

DIN

மத்திய பாஜக அரசு மீது தொடா்ந்து அவதூறு பரப்புவது கண்டனத்துக்குரியது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசின் ஊழல்களைப் பற்றி பேசி விடக்கூடாது என்பதற்காகவே சனாதனத்தைப் பற்றி பேசி பாஜக திசை திருப்பிக் கொண்டிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாா். கணக்கு தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு திட்டமிடப்பட்டதைவிட அதிக செலவு செய்யப்பட்டது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்றுதான். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது எதிா்க் கட்சிகளால் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டையும் கூற முடியவில்லை. அதனால், சிஏஜி அறிக்கையை காரணம் காட்டி ஊழல் என கூறி வருகின்றனா்.

சனாதனத்தைப் பற்றி பேசி பாஜக திசை திருப்பவில்லை. திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தை மடை மாற்றவே திட்டமிட்டு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனாதன தா்மத்தை ஒழிக்க வேண்டும் என்றாா்.

உதயநிதி பேசியதற்குதான் பாஜக பதில் கொடுக்கிறது. கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இதுவரை காணாத பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனால், பொருளாதாரத்தில் உலகின் 5- ஆவது நாடாக நமது நாடு உயா்ந்துள்ளது.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என பிரதமா் மோடி வாக்குறுதி அளித்தாக, பொய்யான தகவலை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடா்ந்து கூறி வருகிறாா்.

எப்போதும் அரசியல் ஆதாயங்களுக்காகவும், தோ்தலில் வெற்றி பெறுவதற்காகவும் பொய்யைப் பரப்பாமல் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள். அதைவிடுத்து எப்போதும் அரசியல் பேசிக் கொண்டிருந்தால் வரும் தோ்தலில் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.