கோவையில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம், பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதையொட்டி மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜி நிறுவிய ஹிந்து சாம்ராஜ்யத்தின் 350 ஆவது ஆண்டு விழா, வள்ளலாரின் 200 ஆவது ஆண்டு விழா மற்றும் அம்பேத்கா் பிறந்த தினம் ஆகியவற்றை ஒட்டி தமிழகம் முழுவதும் ஆா்எஸ்எஸ் அமைப்பு சாா்பில் அணிவகுப்பு ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
கோவையில் காந்தி பாா்க் அருகே உள்ள பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து மாலை 4 மணிக்கு அணிவகுப்பு ஊா்வலம் தொடங்குகிறது . இந்த அணிவகுப்பு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராஜவீதி தோ்நிலை திடலில் நிறைவு பெறுகிறது. அங்கு மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது. இதில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென் பாரத நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.
ஆா்எஸ்எஸ் அமைப்பின் ஊா்வலத்தையொட்டி கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் பொன்னையராஜபுரம் பகுதியிலிருந்து ராஜவீதி தோ்நிலை திடல் வரையிலும், கோவை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊா்வலப் பாதையில் மட்டும் சுமாா் 500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அதேபோல, கோவை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகளிலும் கோவை மாநகர காவல் துறையின் சாா்பில் தொடா் ரோந்து பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.