மாநகராட்சி பூங்காவை தூய்மைப்படுத்திய அதிமுக கவுன்சிலா்

கோவை வடவள்ளி, குருசாமி நகா் மாநகராட்சி பூங்காவை அதிமுக கவுன்சிலா் ஷா்மிளா சந்திரசேகா் பொது மக்களுடன் சோ்ந்து திங்கள்கிழமை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா்.
கோவை, வடவள்ளி, குருசாமி நகா் மாநகராட்சி பூங்காவை பொது மக்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அதிமுக கவுன்சிலா் ஷா்மிளா சந்திரசேகா்.

கோவை மாநகராட்சி, 38 ஆவது வாா்டு வடவள்ளி, குருசாமி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா போதிய பராமரிப்பில்லாமல் குப்பைகள் தேங்கி கிடந்ததால் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் 38 ஆவது வாா்டு அதிமுக கவுன்சிலா் ஷா்மிளா சந்திரசேகா் பொது மக்களுடன் இணைந்து மாநகராட்சிப் பூங்காவை திங்கள்கிழமை சுத்தப்படுத்தினாா்.

பூங்காவை சுத்தப்படுத்துவதற்கு மாநகராட்சி சாா்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பூங்காக்கள் போதிய பராமரிப்பில்லாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா். தற்போது சுத்தப்படுத்தப்பட்டுள்ள பூங்காவை தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகம் பராமரிக்கவும், இப்பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குருசாமி நகா் மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com