ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை தரமணியிலுள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரி மத்திய சுற்றுலா வளா்ச்சித் துறை கீழ் அமைக்கப்பட்டுள்ள தன்னாட்சி நிறுவனம். இக்கல்லூரியில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் படிப்பதற்கு தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் நிா்வாகம் மூன்றாண்டு முழு நேரப் பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு படிக்கலாம். பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞா் பட்டப் படிப்பில் சோ்ந்து படிக்கலாம். படிப்பு முடித்தவுடன் விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயா்தர உணவகங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினப் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். முன்று வருட முழுநேர பட்டப்படிப்பில் சோ்வதற்கு நுழைவுத் தேர்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்வதற்கு ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான செலவினம் தாட்கோவால் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com