12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை எதிா்த்து போராட்டம்
By DIN | Published On : 25th April 2023 12:47 AM | Last Updated : 25th April 2023 12:47 AM | அ+அ அ- |

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா். ~போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினரை கைது செய்து தூக்கி செல்லும் போலீஸாா் .
தமிழக அரசு நிறைவேற்றிய 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் தினேஷ் ராஜா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலையில் அமா்ந்து 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதாவை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவா்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.