இந்திய ஹாக்கி வீரா்கள் பங்கேற்கும் 7ஆவது ஆசிய ஆடவா் ஹாக்கி கோப்பை - 2023 போட்டிகள்,”செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் எல்.இ.டி. திரை மூலம் நேரலையில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளதாவது:
7ஆவது ஆசிய ஆடவா் ஹாக்கி கோப்பை - 2023”போட்டி சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறுகின்ற இப்போட்டியை ஹாக்கி இந்தியாவுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்தவுள்ளது.
இப்போட்டியில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியானது தினமும் மாலை 4 மணி, மாலை 6.15 மணி மற்றும் இரவு 8.30 மணிக்கு குழு நிலையில் மூன்று போட்டிகள் நடைபெறும்.
இந்தியா ஆகஸ்ட் 3ஆம் தேதி சீனாவுடனும், 4ஆம் தேதி ஜப்பானுடனும், 6ஆம் தேதி மலேசியாவுடனும், 7ஆம் தேதி கொரியாவுடனும், 9ஆம் தேதி பாகிஸ்தானுடனும்
விளையாடவுள்ளது.
இந்தப் போட்டிகளை கோவை மாவட்டத்தில் அனைவரும் காணும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அதிநவீன மின்னணு விடியோ வாகனத்தின் (எல்.இ.டி. திரை) மூலம் கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு 8.30 மணிக்கு நடைபெறும்
நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இப்போட்டியை கண்டுகளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.