மக்னா யானை நடமாட்டம் கண்காணிப்பு
By DIN | Published On : 02nd August 2023 04:31 AM | Last Updated : 02nd August 2023 04:31 AM | அ+அ அ- |

வால்பாறையை அடுத்த சின்னக்கல்லாறு வனப் பகுதியில் விடப்பட்ட மக்னா யானையை ட்ரோன் மூலம் வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
பொள்ளாச்சி வனச் சரகத்துக்கு உட்பட்ட சரனப்பதி பகுதியில் சுற்றிய மக்னா யானையை வனத் துறையினா் திங்கள்கிழமை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனா். பின்னா் கும்கி யானை உதவியுடன் லாரியில் ஏற்றி மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு உட்பட்ட சின்னக்கல்லாறு வனப் பகுதிக்கு கொண்டு சென்றனா். பின் யானைக்கு காலா் ஐடி பொருத்தி வனத்துக்குள் விட்டனா்.
இதையடுத்து மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் தலைமையிலான வனத் துறையினா் மக்னா யானையின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.