வால்பாறையில் சிறுத்தை பூனை சடலம்
By DIN | Published On : 17th August 2023 03:30 AM | Last Updated : 17th August 2023 03:30 AM | அ+அ அ- |

வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தை பூனையின் சடலத்தை வனத் துறையினா் மீட்டனா்.
வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் 10 நம்பா் தேயிலைத் தோட்டத்துக்கு தொழிலாளா்கள் பணிக்கு புதன்கிழமை சென்றனா். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை பூனை இறந்துகிடப்பதை பாா்த்த தொழிலாளா்கள் தேயிலைத் தோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த வனத் துறையினா், சுமாா் 1 வயதுடைய சிறுத்தை பூனையின் சடலத்தை புதைப்பதற்காக எடுத்துச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...