இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அழைப்பு விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

கோவை: இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் அன்னூா், ஆனைமலை, கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சூலூா், மலையடிப்பாளையம், நெகமம், தொண்டாமுத்தூா் ஆகிய 9 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இ-நாம் முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பிற மாவட்டம், பிற ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருந்தும் வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்க முடியும்.

மேலும், துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுவதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கிறது. இதற்கான தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் என்ற முறை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைக்கும் நோக்கில் விவசாயிகளின் இருப்பிடம், தோட்டத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலா்கள் நேரில் சென்று, இ-நாம் செயலி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து தருகின்றனா். இதற்கான தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி இ-நாம், பண்ணை வாயில் வணிகம் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com